நாமக்கல்,
எலச்சிபாளையத்தை அடுத்துள்ள ஆசிரியர் காலனியில் தார் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமம் ஆசிரியர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெருமளவு வசித்து வரும் இப்பகுதியில் தற்போதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், மழைக் காலங்களில் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியும் நிறைந்து சாலையில் பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகவே மண் சாலையை தார் சாலையாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் தொடர் போராட்டங்களை நடத்தவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: