திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழனன்று நடைபெற்றது.

இந்த போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் பள்ளிக்கு ஒருவர் வீதம் 51 பள்ளிகளிலிருந்து 51 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் பல்வேறு தலைப்புகளில் கவிதை,கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இந்த மூன்று போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு மாநில அளவில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். இதில் தமிழ் வளர்ச்சித்துறை துணை ஆணையர் விஜயலட்சுமி, கவிஞர் சிவதாசன், நஞ்சப்பா அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: