புதுதில்லி,
நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு 49 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் தமிழில் நீட் தேர்வுஎழுதி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விவாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாணவர்களுக்கு 196 கருணைப்பெண் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில், நீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம். தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர் என்று சிபிஎஸ்இ கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று கருணை மதிப்பெண் குறித்த வழக்கு விசாரணையின் போது நீட் தேர்வு எழுதுவோருக்கு ஆங்கிலம் தெரிவிந்திருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தரவு வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து வினாத்தாள் குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர் மாணவர்ககளுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் நீட் கருணை மதிப்பெண் தொடர்பான வழக்கை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.