மும்பை;
அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 2018-ஆம் ஆண்டில் இதுவரை ரூபாயின் மதிப்பு 10 சதவிகிதம் அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த வாரம், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 70 ரூபாயைத் தாண்டி வீழ்ச்சியைச் சந்தித்தது. புதன்கிழமையன்று 70 ரூபாய் 59 காசுகள் என்ற அளவிற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி சென்றது.

இந்நிலையில், வியாழக்கிழமையன்று வர்த்தகநேர துவக்கத்தில் ரூபாய் மதிப்பு மேலும் 23 காசுகள் சரிந்து, 70 ரூபாய் 82 காசுகளாக சரிந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.