நாமக்கல்,
சொத்து வரி உயர்வை கண்டித்து காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை 100 சதவிகிதம் வரை உயர்த்தி தமிழக அரசுசமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இந்த வரி உயர்வால் ஏழை,எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக, சொந்த வீடு இல்லாமல் வாடகைக்கு குடியிருக்கும் மக்களின் மீது வாடகை சுமை அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும்,காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மாதத்திற்கு அரை மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்துவந்த சேந்தமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ்உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாகதீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் ராணி தலைமை வகித்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.ஜோதி, மூத்த தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.