திருப்பூர்,
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இலவச கண் மருத்துவ முகாம் வியாழனன்று நடைபெற்றது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டம், திருப்பூர் வடக்கு ரோட்டரி மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து அனைவருக்குமான “இலவச கண் பரிசோதனை முகாம்” வியாழனன்று கல்லூரியின் குமரன் அரங்கில் நடைபெற்றது. இந்த முகாமில் அலகு – 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். வடக்கு ரோட்டரி சங்கத்தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். செயலர் மகேஷ்பாபு, லோட்டஸ் மருத்துவமணை மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த பரிசோதனை முகாமில் கண் பார்வை குறைபாடு, அழுத்தம், எரிச்சல், சர்க்கரை நோய் போன்றவைகள் பரிசோதிக்கப்பட்டது.  இதில், கல்லூரி மாணவர்கள் 451 பேர், 63 பொதுமக்கள் மற்றும் பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இம்முகாமில் 56 நபர்களுக்கு குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டு இலவச சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 8 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்முகாமை கல்லூரி முதல்வர் இராமையா ஏற்பாடு செய்திருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: