தீக்கதிர்

கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவை ,
கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி சேம்புக்கரை பகுதி அருகே காட்டு யானை முருகேசன் என்பவரை தாக்கியது. இதில் ஆதிவாசி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முருகேசனின் உடலை மீட்ட காவல் துறையினர் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.