பிரதமரைக் கொலை செய்ய சதி செய்தனர் என்பதுதான் குற்றச்சாட்டாம்.
இதற்கு ஆதாரமாக ரோனா வில்சன் என்பவரின் கம்ப்யூட்டரில் போலீஸ் ‘கண்டு பிடித்த’ கடிதமாம். அதை ஒரு தொலைக்காட்சி சேனல் வெளியிடுமாம். (சிறுபிள்ளைகளின் நாடகத்தில் கூட இடம்பெறாத அளவு மோசமாக எழுதப்பட்ட காமெடி கடிதம்)
பிரதமரையே கொலை செய்ய நடந்த சதியை பூனே நகர போலீஸே ஆற அமர விசாரிக்குமாம். மத்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளேயே வராதாம். ஆறு மாதத்திற்குப் பிறகு ‘சதிகாரர்களை’ கைது செய்வார்களாம். அப்போதும் கைதுக்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க மாட்டார்களாம்.
சந்திரமுகியில் வடிவேலு சொல்லும் கதையை விடக் காமெடியாக இந்தக் கதை தோன்றலாம். ஆனால் விஷயம் மிகவும் சீரியசானது. கொஞ்சம் அசந்தால் நம்மில் சிலருக்குக் கூட இது நடக்கலாம்.

Leave A Reply

%d bloggers like this: