சேலம்,
காலமுறை ஊதியம் உள்ளிட்ட அரசு பேச்சுவார்த்தையில் ஏற்றுககொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சத்துணவு துறையில் 35 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்கவேண்டும். விலைவாசி உயர்வைகருத்தில் கொண்டு ஒரு மாணவனின் உணவிற்கான மானியமாக 5 ரூபாய் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எ.செல்வம் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எ.அமராவதி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கே.ராஜவேலு விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வி.செல்வம் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மேற்குவட்டகிளை செயலாளர் எஸ்.வடிவேல், தலைவர் பாஸ்கரன், கே.கோவிந்தராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்ட கிளை தலைவர் கணேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இணைச் செயலாளர் அர்சுணன், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன், ஆசிரியர் சங்க செயலாளர் கணேசன், மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேட்டூர் நங்கவள்ளி பகுதியில் ஒன்றியச் செயலாளர் பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மேட்டூர் வட்ட கிளை செயலாளர் து.சிங்கராயன், காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.திருவரங்கன், வட்டகிளை தலைவர் கலைவாணன், நாகராஜன், கதிர்வேல், செல்வி, தனக்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோடு ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: