ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்டஆட்சியர் எஸ்.பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் 100 சதவிகிதம் மின் இணைப்பு உள்ள மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மலைப்பகுதியான தாளவாடி யூனியனில் ராமர் அணையில் 18 வீடு, மல்லியன்மன் துர்க்கையில் 126 வீடு, கத்திரிமலையில் 86 வீடுகளுக்கு மட்டுமே மின்சார இணைப்பு வழங்க முடியவில்லை. அம்மலைகளுக்கு வாகனம் செல்லவும், மின்பாதை அமைக்கவும் வசதி இல்லை.இதனால், அங்கு ஒவ்வொரு வீட்டுக்கும்சோலார் பேனல் அமைத்து 12 ஓல்டுபேட்டரி மூலம் தலா ஐந்து வாட்ஸ் மின் பல்பு, மூன்று இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒயரிங் பணி வழங்கி, அனைத்து வீட்டுக்கும் மின் இணைப்பு வழங்கியதால் 100 சதவிகிதம் மின்சார வசதி உள்ள மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மின்தடை நீக்க சேவை மைய எண் அறிமுகம்மேலும், ஈரோட்டில் மின்தடை நீக்க சேவை மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும். மின்தடை ஏற்பட்டதும், இலவச அழைப்பான 1912 என்றஎண்ணில், தங்கள் சர்வீஸ் எண்ணை தெரிவித்தால் ஓரிரு மணி நேரத்தில் மின்தடை சீர் செய்யப்படும். தனி நபர் மின் தடை புகார் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சீர் செய்யப்படும். பிற புகார்களை, வாட்ஸ் ஆப் எண்ணான, 94458 51912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களும் இச்சேவையை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: