கோவை,
இடதுசாரி, தலித் செயல்பாட்டாளர்களை கைது செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் வியாழனன்று வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த இடதுசாரி கவிஞர் வரவரராவ், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெர்னான் கன்சால்வஸ், கவுதம் நவலகா, அருண் பெரைரா மற்றும் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகிய ஐவரும் புதனன்று கைது செய்யப்பட்டனர். மத்தியஅரசின் இந்த சர்வாதிகார போக்கிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் ஒருபகுதியாக கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சர்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் எஸ்.சுந்திரமூர்த்தி, மாசேதுங், ஜோதிகுமார், பேராசிரியர்ராமசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கோபால்சங்கர், ரவி, தமிழ்செல்வி மற்றும் நிக்கோலஸ், வெண்மணி உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: