நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் செவ்வாயன்று தொடங்கியது.                                                                                   முகுருஜா

இந்தத் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில்,ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவிடம் 5-7,6-2,4-6,4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறினார்.
இதே போல மகளிர் பிரிவிலும் ஸ்பெயினின் முகுருஜா,ஜெர்மனியின் ஜார்ஜஸ், கிரீஸின் சக்கரி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்:

ஆடவர் ஒற்றையர்

நடால் (ஸ்பெயின்)
ஜுவன் மார்ட்டின் (அர்ஜெண்டினா)
தியம் (ஆஸ்திரியா)
ஆண்டர்சன் (தெ.,ஆப்பிரிக்கா)
ஜான் இஸ்னர் (அமெரிக்கா)

 

மகளிர் ஒற்றையர் பிரிவு

ஸ்விட்லோனியா (உக்ரைன்)
வில்லியம்ஸ் சகோதரிகள் (அமெரிக்கா)
ஸ்டீப்ஹென்ஸ் (அமெரிக்கா)
அசரென்கா (பெலாரஸ்)

Leave a Reply

You must be logged in to post a comment.