புதுதில்லி :

முறைகேடாக கட்டிடங்கள் கட்டப்படுவதாக வந்த புகாரையடுத்து ஹரித்வார் கோட்டத்திற்கு உட்பட்ட காடுகளில் ஆய்வுசெய்யக்கோரி உத்தரகண்ட் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநில ஹரித்வார் கோட்டத்திற்கு உட்பட்ட சயாம்பூர் காடுகளில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கட்டிடங்கள் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகிவருவதாக சூழலியலாளர் கௌரி மௌலேக்ஹி புகார் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு சயாம்பூர் மலைக்காடுகளில் ஆய்வு நடத்த உத்தரகண்ட் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சோதனையை மேற்பார்வையிட நீதிபதி யூ.சி தியானி, முதன்மை காடுகள் பாதுகாப்பு அலுவலர் மனோஜ் சந்திரன், டேராடூன் நில கணக்கெடுப்பு இயக்குநர், மாவட்ட குற்றவியல் நடுவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: