கோபிசெட்டிபாளையம்:
சுதந்திரப் போராட்டத் தியாகியும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து தலித் மக்களுக்காக பாடுபட்டவருமான லட்சுமண அய்யரின் திருவுருவச் சிலையை புதனன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி லட்சுமண அய்யர். வெள்ளையேன வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

மேலும், தீண்டாமை கொடுமை களுக்கு எதிராக இறக்கும் வரை தொடர்ந்து போராடி வந்தார். கோபி நகர்மன்றத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்த இவர் தனது சொத்துகளில் பெரும்பகுதியை தானமாக வழங்கினார். கோபியில் உள்ள பெரும்பாலான அரசு  அலுவலகங்கள் இவர் அளித்த இடத்தில்தான் தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும், கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, டி.எஸ்.சாரதா வித்யாலயம், விவேகானந்தா ஐ.டி.ஐ. மற்றும் ஸ்ரீராமாபுரம் ஹரிஜனக் காலனி, துப்புர வுத் தொழிலாளர்களுக்கான காலனி ஆகியவை இவர் தானமாக அளித்த இடத்தி லேயே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் லட்சுமண அய்யர் அமைத்த விடுதியில் படித்து பயடைந்த
முன்னாள் மாணவர்கள் அவருக்கு சிலை  அமைக்க முடிவு செய்தனர். அதனடிப் படையில், கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோட்டில் அவர் ஆரம்பித்து  வைத்த ஸ்ரீ டி.எஸ்.ராமன் சரோஜினி தேவி விடுதி வளாகத்தில் லட்சுமண அய்யரின் உருவச் சிலை நிறுவப்பட்டது. இச்சிலையை புதனன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்து சிறந்த சமூகசேவை ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அகில இந்திய ஹரிஜன சேவா சங்க தலைவர் சங்கர் குமார் சன்யால், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: