திருவனந்தபுரம்:
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “திமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் நலனுக்கான உங்களது அனைத்துப் பணிகளிலும் வெற்றியடைய விழைகிறேன். தமது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகவும் கூட்டாட்சி மற்றும் பன்முகத் தன்மையை பாதுகாப்பதற்காகவும், ஓய்வின்றி போராடிய கலைஞர் கருணாநிதி அவர்களின் சிந்தனைகளை உங்களால் மேலும் உறுதியாக முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: