ஆத்தூர்,ஆக 29-
முறையாக குடிநீர் வினியோகம் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து
பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதனன்று ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் வழங்காத்தை கண்டித்து ஆத்தூர் – ராசிபுரம் சாலையில் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

Leave A Reply

%d bloggers like this: