சேலம்,
முறையாக குடிநீர் விநியோகிக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் வழங்காததைக் கண்டித்து புதனன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்தூர் – ராசிபுரம் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் விநியோகத்தை சீரமைப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.