ஹைதராபாத் :

தெழுங்கு தேசம் கட்சியை நிறுவிய முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ஆர் அவர்களின் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா(61) இன்று காலை விபத்தில் உயிரிழந்தார்.

நால்கொண்டா மாவட்டத்தின் அன்னேபார்தி என்ற இடத்தில் முன் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது நடுவில் இருந்த தடுப்பில் மோதி அவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் ஹரிகிருஷ்ணாவுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் அவர் காமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹரிகிருஷ்ணா கதாநாயகனாக பல தெலுங்கு படங்களில் நடித்தவர். மேலும், தெழுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஆந்திர பிரதேச மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் கடைசியாக எழுதிய கடிதம் கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: