தாராபுரம்,
தாராபுரம் அருகே மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர்.

தாராபுரத்தில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலங்கியம் ரவுண்டானா அருகே வந்த லாரியை நிறுத்துமாறு கூறினர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் லாரியை பேருந்து நிலையம் வரை துரத்தி சென்று பிடித்தனர். லாரியை பரிசோதனை செய்தனர். இதில் திண்டுக்கலில் இருந்து பல்லடத்திற்கு கிராவல் மண் ஏற்றி செல்வதாக லாரி ஓட்டுனர் கூறினார். ஆனால் உரிமத்தை வாங்கி ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. மேலும்,லாரியை சோதனை செய்தபோது ஆற்றுமணல் இருந்தது. லாரி திண்டுக்கல், கோவிலுரை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆற்றுமணலை சட்டவிரோதமாக கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: