சிட்னி;
ஆஸ்திரேலியாவுக்கு அருகில், பசிபிக் பெருங்கடலில் புதன் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவின் இலே ஹண்டர் கடலோரப் பகுதியிலிருந்து மேற்கே 209 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக பதிவாகியுள்ளது.புதன் அதிகாலை 3.51க்கு பசிபிக் நேரப்படி ஏற்பட்டுள்ள இந் நிலநடுக்கம் ஆரம்பத்தில் 22.066 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 170.050 டிகிரி கிழக்கு திசையில் தொடங்கி, 26.7 கி.மீ ஆழம்வரை இதன் பாதிப்பு என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிப்பிக்கின் நடுக்கடலில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கம் அதிக தீவிரமாக இருந்தாலும், இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

Leave A Reply

%d bloggers like this: