கோவை,
பழங்குடியின பெண் தவறவிட்ட பணத்தை, சாலையில் கண்டெடுத்த நபர்கள் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், ஆனைமலை பகுதி பொன்னாலம்மன் துறையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி காளியம்மாள். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் தனது வீட்டின் மராமத்து பணிகளுக்கான பொருட்களை வாங்க செவ்வாயன்று ரூ.41 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஆனைமலை சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு பணம் தொலைந்த நிலையில், இதுகுறித்து புதனன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, செவ்வாயன்று இரவு ஆனைமலை மார்க்கெட் சாலையில் ஒரு பை கிடந்ததை சாகுல் ஹமீது மற்றும்மன்சூர் அலிகான் ஆகியோர் பார்த்துள்ளனர். இதில் ரூ.41 ஆயிரம் மற்றும் காளியாபுரம் சொசைட்டிக்கான ஆவணங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து புதனன்று காளியாபுரம் சொசைட்டிக்கு இருவரும் நேரில் வந்து பையில் பணம் உள்ளதையும், இந்த சொசைட்டியின் ஆவணம் உள்ளதாக சொல்லி கொடுத்துள்ளனர். இதுகுறித்து காளியம்மாளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இப்பணத்தை ஒப்படைத்த இருவரையும் ஆனைமலை காவல்துறை ஆய்வாளர் அம்மாதுரை, உதவி ஆய்வாளர் செல்வநாயகம் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.