திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரித்தனர். தேசிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாகவும், ட்விட்டர் பதிவுகளின் மூலமாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் குரோம்பேட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.