திருவனந்தபுரம்:
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள வரி செலுத்துவோருக்கு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு மட்டும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேரளாவில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள இடையூறுகளால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஆகஸ்ட் 31, 2018 தேதியிலிருந்து செப்டம்பர் 15, 2018 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கேரள மாநிலத்தின் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.