மும்பை;
கறுப்புப் பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக என்று சொல்லி கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி புதனன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், 99 சதவீதம் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில், இப்போது கூடுதலாக 3 சதவீதம் மட்டுமே வந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், மிக, மிகக் குறைந்த அளவு பணம் மட்டுமே வெளியே சென்றுள்ளது. அதாவது முதல்கட்டமாக ரூ.5 லட்சம் கோடிக்கு கறுப்புப் பணம், கள்ளநோட்டு தடுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில் எத்தனை லட்சம் கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளன என்பது குறித்த தெளிவான புள்ளிவிவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலும் நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் முழுமையான தகவல்களைத் தெரிவிக்காமல், நோட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து வந்தது.இந்நிலையில், 22 மாதங்களுக்குப் பின் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் எண்ணப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி ரிசர்வ் வங்கி 2017-18-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: