சென்னை,
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, கடந்த 17 ஆம் தேதி திருச்சியில் ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பிலும்,19 ஆம் தேதி ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ என்ற தலைப்பில் மதுரையிலும்,கோவையில் 25 ஆம் தேதி ‘மறக்க முடியாத கலைஞர்’ என்ற தலைப்பிலும் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. . கடந்த 26 ஆம் தேதி நெல்லையில் ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் கருணாநிதி நினைவு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. இதில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆக.30 அன்று சென்னையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, காங்கிரஸ் சார்பில் குலாம்நபி ஆசாத், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.