கோவை,
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை சரவணம்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனத்திற்கு பூமார்க்கெட், துடியலூர், அன்னூர், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் சார்பில் ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது. இதில் ஏராளமானோர் பணம் கட்டி வந்த நிலையில், முதிர்வு காலம் முடிந்தும் தொகையைத் தராமல் நிதி நிறுவனத்தினர் காலதாமதம் செய்துள்ளனர். மேலும் கடந்த மே மாதம் முதல் நிதி நிறுவனத்தின் கிளைகளும் மூடப்பட்டுள்ளன. அங்கு பணிபுரிந்தவர்களும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் பணத்தை இழந்த 20க்கும் மேற்பட்டோர் புதனன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அவர்கள் கூறும்போது, சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டினோம். ரூ.1.50 கோடிக்கு மேல் மோசடி செய்து விட்டு நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஆகவே, எங்கள் பணத்தை மீட்டுத்தரக் கோரி தற்போது காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.