வாரனாசி :

உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு மருத்துவமனையில் அனுமதி தர மறுத்ததால் சாலையோரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்த அவலம் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் சிரவஸ்தி மாவட்டத்தில் சுனிதா என்ற பெண்ணை அவரது கணவர் பாஹ்ரய்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மகப்பேறுக்காக கூட்டிச் சென்றுள்ளார். ஆனால், அம்மருத்துவமனை அலுவலர்கள் அவர்களை பிங்கா என்ற இடத்திலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.

பின்பு அங்கு சென்ற சுனிதாவை 40கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாஹ்ரய்ச் பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு திரும்பவும் கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, காசு பற்றாக்குறையால் மேற்கொண்டு போக முடியாமல் அவருக்கு சாலையோரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தகவலறிந்து சிரவஸ்தி மாவட்ட குற்றவியல் நடுவர் தீபக் மீனா இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதில், குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: