யாழ்ப்பாணம்:
இலங்கையின் வன்னி பகுதியில் ரகசியமாக புதைக்
கப்பட்டிருந்த 90 மனித எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தது. இந்தப் போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இறுதிப் போரின் முக்கியப் பகுதியாக விளங்கிய வன்னி பகுதியில் ரகசியமாக புதைக்கப்பட்டி
ருந்த 90 பேரின் எலும்புக் கூடுகள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை
மீது போர்க்குற்ற விசாரணையை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் மீண்டும் குரல் எழுப்பியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: