கோவை,
இஎஸ்ஐ, ஈபிஎப் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை களையக்கோரி புதனன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 7 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். 2009-2010 ஆண்டுக்கான நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். இஎஸ்ஐ-ஈபிஎப் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் எம்.பி.வடிவேல் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். முடிவில், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சி.வினோத்குமார் போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். இப்போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.