ஆசிய விளையாட்டுப் போட்டி குத்துச்சண்டை 75 கிலோ (மிடில்வெயிட் – ஆடவர்) பிரிவு இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஷ் கிரிஷனும்,சீனாவின் டங்லாதிஹனும் மோதினர்.தொடக்கம் முதலே இரு வீரர்களும் ஆக்ரோஷமாக புள்ளிகளை குவித்தனர்.இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் விகாஷ் கிரிஷன் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.விகாஷ் கிரிஷன் தனது அரைறுதியில் கஜகஸ்தான் வீரர் அபில் கானை எதிர்கொள்கிறார்.49 கிலோ (ஃப்ளைவெயிட்- ஆடவர்) பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் தனது காலிறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் கிம் ஜங்க்கை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.அமித் பங்கல் தனது அரைறுதியில் பிலிப்பைன்ஸ் வீரர் பாலம் கார்லோவை எதிர்கொள்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.