நாகப்பட்டினம்,
புகழ் பெற்ற வேளாங்கண்ணித் தூய மரியன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா புதன்கிழமை மாலை 6 மணியளவில் கொடியேற்றதுடன் துவங்குகிறது.

பேராலயத்தில் கொடியைத் தஞ்சைப்பேராயர் அம்புரோஸ் ஏற்றுகிறார். நடைபயணமாகவும் பேருந்துகள், வாகனங்கள், ரயில்கள் மூலமாகவும் பல்லாயிரம் மக்கள் கொடியேற்றத்தின் போது வேளாங்கண்ணியில் சங்கமாவார்கள். செப்டம்பர்-7 அன்று இரவு மாதாவின் அலங்கரிக்கப்பட்ட தேர்ப் பவனி நடைபெறும். கேரளத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் பலரும் வேளாங்கண்ணிக்கு வந்திருக்கிறார்கள். அப்படி வந்த கேரள மக்கள், பேராலய அதிபர் பெரிய தந்தையைக் கண்டு, தாம் பட்ட இன்னல்களைக் கூறிக் கதறி அழுததாகவும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும், மேலும் கேரளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேளாங்கண்ணிப் பேராலயம் சார்பில் ஏராளமான நிவாரணப் பொருள்களைக் கேரளத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் பேராலயத்தின் பெரிய தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகரன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.