இராஜபாளையம்,
தளவாய்புரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதகாலமாக 50 சதவீத கூலி உயர்வு மற்றும் போனஸ் கேட்டு போராடி வருகிறார்கள். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் உரிமையாளர்கள் கூலிஉயர்வு வழங்க முன்வரவில்லை. போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சர்வகட்சி சார்பில் அரசரடியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி இராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தை இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துவக்கி வைத்தார். போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.இராமர், ஏஐடியுசி வீராச்சாமி, அதிமுக கருப்பையா, ஜனதாபாலு, பி.ஜே.பி சுப்பையா மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.