சிவகங்கை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 16-வது
மாநாடு சிவகங்கையில் டிசம்பர் 27,28,29 ஆகிய தேதிகளில் நடை பெறுகிறது. இம் மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் ஆகஸ்ட் 28 செவ்வாயன்று சிவ கங்கையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுரேஷ் வரவேற்றுப் பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட அமைப் பாளர் எம்.சின்னத்துரை, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில்,மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலப் பொருளாளர் தீபா, மாநில துணைத்தலைவர் கோபிநாத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் வசந்தகுமார், தமிழரசன், மணி கண்டன், இந்திய மாணவர் சங்கத்தின்
மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவராக வழக்கறிஞர் ராஜசேகரன், செயலாளராக தென்னரசு, பொருளாளராக தமிழ் மகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். மாணவர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.முன்னதாக கங்கை கருங்குயில் கலைக்குழுவின் தப்பாட்ட நிகழ்வும்,கொம்பன் பட பாட்டு புகழ் மகாலிங்கத்தின் பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பாடகர் மகா லிங்கத்தை கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்தினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.