புதுதில்லி;
தில்லியில் ‘விராத் இந்துஸ்தான் சங்கம்’ என்ற இந்துத்துவா அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு வர இருக்கிறார். முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி, இலங்கைக்கே நேரில் சென்று ராஜபக்சே-விடம் அளித்து அழைப்பு விடுத்தார். இதனால், ராஜபக்சே நிச்சயமாக வருவார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ராஜபக்சே-வின் வருகை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியசாமி, “ராஜபக்சேவிற்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட வேண்டும்” என்று ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.“ராஜபக்சே மிகவும் தன்மையான, பண்பாடு மிக்க மனிதர்” என்றும், “நெல்சன் மண்டேலா, அவருடைய நாட்டினருக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததற்கு நாம் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பித்ததைப் போல், விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை மக்களையும் இந்திய மக்களையும் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக ராஜபக்சே-விற்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று சுப்பிரமணியசாமி காரணம் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.