சென்னை,
பி.எஸ்.என்.எல். மொபைல் சேவை அனைத்து நிறுவனங்களின் மொபைல் சேவைகளிலும் மிகச் சிறந்ததாக டிராய் அமைப்பால் கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம் (டிராய்) தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் அண்டைய மாவட்டங்களில் ஜூன் 25 முதல் 29 வரை பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பல மொபைல் சேவை நிறுவனங்களின் மொபைல் சேவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் மொபைல் குரல் சேவையின் தரம், மொபைல் கவரேஜ், டேட்டா பதிவிறக்க வேகம் போன்ற பல்வேறு சேவை குறியீடுகளில் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனைகளில் மொபைல் கவரேஜ், டேட்டா பதிவிறக்க வேகம் உள்ளிட்ட பெரும்பாலான குறியீடுகளில் பி.எஸ்.என்.எல். சேவை மிகச்சிறந்த
தாக அறியப்பட்டது. டிராய் அமைப்பு மேற்கொண்ட இந்த தன்னிச்சையான ஆய்வின்படி பி.எஸ்.என்.எல்.மொபைல் சேவை அனைத்து நிறுவனங்களின் சேவைகளை விட மிகச்சிறந்ததாக கண்டறியப் பட்டுள்ளது.

புதிய சலுகை:
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு “ரக்ஷா பந்தன்” ஆஃபரை ஆகஸ்ட் 26 முதல் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வெறும் ரூ.399க்கு 74 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் கிடைக்கும். மேலும் கூடுதலாக, எத்தனை முறை வேண்டுமானாலும் பாட்டு மாற்றம் செய்துகொள்ளும் வகையில், ரிங்டோன் வசதியும் இதில் இருக்கிறது. நேஷனல் ரோமிங்கிலும், மும்பாய், தில்லி உட்பட அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். கிடைக்கும்.“ரக்ஷா பந்தன்” என்பது, சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அளவற்ற அன்மையும் பாசப் பிணைப்பையும் கொண்டாடும் விழாவாகும். இதே வழியில், இவ்விழாவைக் கொண்டாடும் விதமாக, சிறப்புக் கட்ட வவுச்சர் எஸ்.டி.வி. 399-ஐ அன்லிமிட்டெட் அம்சங்களுடன் பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது என்றும், இது அனைவருக்கும் சிறந்த விழாக்கால பரிசாக இருக்கும் எனவும் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் சிறீவத்சவா தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.