சிவகங்கை,
மனித உரிமைகளை காலில் போட்டுமிதிக்கும் மாநில அதிமுக அரசையும் மொழி உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசையும் ஆட்சி அதிகாரத்தி லிருந்து அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கிறது. கார்ப்ப ரேட்களுக்கு காவு கொடுக்கிற அரசாக உள்ளது. மத்திய அரசு, மொழி உரிமையைப் பறிக்கிறது. போராடிப் பெற்ற 69சதவீத இட ஒதுக்கீட்டு உரிமைக்கு வேட்டு வைக்கப்பார்க்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் சட்டப் பாதுகாப்பை, அச்சமான சூழ்நிலைக்கு மாற்றியுள்ளார்கள். இந்த ஆட்சிகளை அகற்ற வேண்டும். தொழில் வளர்ச்சியிலும், விவசாயத்திற்கான பாசனத்திட்டத்திலும் கடந்த பத்து வருடமாக சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வெள்ளமென தண்ணீர் சென்றாலும் குடிநீருக்காக அலையும் நிலை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப்பெரியாறு அணையில் இன்னொரு டனல் (தண்ணீர் செல்வதற்கான பெரிய இரும்புக்குழாய்) அமைத்திருந்தால், கூடுதலாக 2400 கன அடி தண்ணீர் கிடைத்திருக்கும். அந்த தண்ணீரால் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங் கள் நன்கு பயன்பெற்றிருக்கும். காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைத்திருந்தால், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிதண்ணீர் ஆதாரத்திற்கும் பயன்பெற்றிருக்கும். இதையெல்லாம் தமிழக அரசு செய்யவில்லை. எதிர்காலத்தை திட்டமிடுகிற, மாற்று அரசியலை முன்னெடுக்கிற வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட் டிற்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.