கோவை,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த தங்கநகையை மீட்க சென்றவரிடம் போலி நகை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவாரம்பாளையத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் 190 கிராம் எடை கொண்ட தங்க நகைகளைஅடகு வைத்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுள்ளார். இந்நிலையில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தி நகையை திரும்பப் பெற்றுள்ளார். அப்போது, இந்நகை முழுவதும் போலியாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகளிடம் கணேசன் புகார் அளித்தார். இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்த தகவல் அப்பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் பரவியதால் ஏராளமானோர் வங்கியின் முன்பு கூடினர். இதன்பின் தாங்கள் வங்கியில் அடமானம் வைத்த நகைகள் கூறித்து விபரம் அறிய வாடிக்கையாளர்கள் முயன்றதால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளரின் நகைகள் பாதுகாப்பாக இருப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில் உறுதி அளித்தனர். இதன்பின்னரே அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: