பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன்… எனக்கு பதவி நீட்டிப்பு தாருங்கள்…
அரசியல் சாசனத்தை சட்டத்தை மீறி – பதவி நீட்டிப்பு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி
லக்னோ:
உத்திரபிரசேசத்தில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன்… எனக்கு பதவி நீட்டிப்பு தாருங்கள்… என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் உறுதி அளித்து பதவி நீட்டிப்பு பெற்றிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஊர்க்காவல்படை டிஜிபி ஆக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. இவர் அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,”பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்கும் பென்சன் எனது குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். எனவே, மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இவருக்கு யோகி ஆதித்யநாத் பதவிநீட்டிப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த சூர்ய குமார் சுக்லா ஏற்கனவே அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி அரசு ஊழியராக இருக்கும் ஒருவர் எந்த அரசியல் கட்சி சார்பு நிலையுடன் செயல்படக்கூடாது. எந்த சார்ப்பு தன்மையும் இன்றி சட்ட விதிகள் படி பணி செய்ய வேண்டும் . ஆனால் ஓர் ஐபிஎஸ் அதிகாரி சட்டத்திற்கு புறம்பாக ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பேசிய போதே இவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. தற்போது மீண்டும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். பதவிநீட்டிப்பு தாருங்கள் என எழுத்துபூர்வமாக கேட்கும் ஒருவரை சட்டப்படி பணியில் வைத்திருப்பதே தவறு. அவரை உடனடியாக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளை சார்ந்த ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: