அகர்தலா:
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில், அதிகாரிகள் அதிகாரப்பூர்வ செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு வரும்போது, ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேன்ட்கள் அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, அம்மாநில வருவாய், கல்வி மற்றும் தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான முதன்மைச் செயலர் சுஷில் குமார், அரசுக் குறிப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், தலைமையில் மாநில அளவில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட மாவட்ட தலைமை அதிகாரிகள், ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேன்ட்கள் போன்ற சில சாதாரண உடைகளை தவிர்க்க வேண்டும்; அதேபோல கூட்ட நடவடிக்கைகளின்போது தங்களுடைய கைபேசிகளில் வரும் செய்திகளை படிப்பதோ, செய்திகளை அனுப்புவதோ கூடாது” என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: