ஈரோடு,
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கம் சார்பில் கடம்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கடம்பூர் பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சத்தி மலைவட்டார கமிட்டியின் சார்பில் சின்னசாலட்டியில் ஞாயிறன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மலை வட்டார தலைவர் எஸ்.பழனியம்மாள் தலைமை வகித்தார். மாநிலதுணை தலைவர் என்.அமிர்தம் சிறப்புரையாற்றினார். மேலும், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பிரசன்னா, மாவட்டத் தலைவர் பி.லலிதா, மலைப்பகுதி செயலாளர் எஸ்.தாயலம்மாள், மலைப்பகுதி பொருளாளர் எஸ்.வினோதினி ஆகியோர் உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் மாதர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சிபிஎம் மலைக்கமிட்டி செயலாளர் சி.துரைசாமி, மலைவாழ் இளைஞர் சங்க மாநிலத் தலைவர் எம்.சடையலிங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொருளாளர் பி.சடையப்பன், மலைவாழ் மக்கள் சங்க மலைக்கமிட்டி செயலாளர் சி.ராசப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்பொதுக்கூட்டத்தில் மாணவ, மாணவியர்களின் நடனங்கள் மற்றும் ஏ.எம்.காதர் நினைவு விடியல் கலைக்குழுவின் தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதிய கிளைகள் அமைப்பு:
முன்னதாக, மாதர் சங்கத்தின் புதியகிளைகள் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சத்தி மலைக்கமிட்டி தலைவராக எஸ்.பழனியம்மாள், செயலாளராக பி.வெள்ளையம்மாள், பொருளாளராக எஸ்.ராசம்மாள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், நம்பியூர் கிளை தலைவராக கிருஷ்ணவேணி, செயலாளராக பரிமளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.