சேலம்,
சேலம் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா ஒப்படைக்கும் நிகழ்ச்சி சேலம் சிறைத்தியாகிகள் நினைவகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங்கிடம் சிஐடியு மாவட்டக் குழு சார்பில் 45 சந்தா உள்ளிட்ட 73 ஆண்டு சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.உதயகுமார், எ.முருகேசன், எம்.குணசேகரன், மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் எ.கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: