திருவனந்தபுரம்,
கேரள வெள்ள நிவாரண நிதிக்காக இந்திய நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக நிதியை அளித்து வருகின்றனர். பல்வேறு அமைப்புகளும் உதவி நிதி அளித்து வருகின்றனர்.
இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக பாலிவுட் பாடகர் மோஹித் சவுகானின் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்யில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சயில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் ‘அமரம்’ என்ற மலையாளப்படத்தில் இடம்பெற்ற ‘மதுபான் குஷ்பூ டெடா ஹாய்’ என்ற பாடலை படினார்.
மேலும் இந்த பாடல் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது முதலில் பொறுப்புடன் களத்தில் இறங்கியவர்கள் மீனவர்கள் தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து மீனவர்களை புகழ்ந்து பேசிய அவர், “மீனவர்கள் தங்கள் படகுகளுடன் களத்திற்கு வந்தனர். பல உயிர்களை காப்பாற்றினர். இது அவர்களின் நெஞ்சார்ந்த நல்லெண்ணத்தை காண்பிக்கிறது” . கேரளா பேரழிவு சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சாதி மற்றும் இனச்சார்ப்பு இன்மை ஆகியவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் “நாம்இணைந்து நின்றால், தோளோடு தோள் கோர்த்தால், கையோடு கை சேர்த்தால், பேரழிவிலும் வழியை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார். தான் பாடியதற்கு காரணம் நீதிபதி குரியன் தான் என தெரிவித்தார்.

நீதிபதி குரியன் ஜோசப்பும் வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்கான இந்த நிகழ்ச்சியில் பாடல் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.