திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் அம்மாநிலத்தின் ஜிடிபியில் 2.2 சதவிகிதம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.கேரளத்தில் சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அங்கு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து ள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடத்தையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகள் அரசு தரப்பிலிருந்தும் இதர மாநிலங்களைச் சேர்ந்த மக்களிட மிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. எனினும் இந்த வெள்ள பாதிப்பால் கேரள மாநிலத்தின் விவசாயம், சுற்றுலா, ஏற்று மதி வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. அம்மாநிலம் வருவாய் ரீதியிலான பெருத்த இழப்புக்கு உள்ளாகியுள்ளது.90,000 கிலோ மீட்டர் அளவிலான சாலைகள், நூற்றுக்கணக்கான பாலங்கள், 50,000 ஏக்கர் அளவிலான விவசாயப் பயிர்கள், 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் என மொத்தம் ரூ.35,000 கோடிக்
கும் மேலான இழப்பைக் கேரளா சந்தித்துள்ளதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மழை வெள்ளத்தால் கேரளாவின் மொத்த உள்மாநில உற்பத்தியில் (ஜிடிபி) 2.2 சதவிகிதம் வரையில் சரிவு ஏற்படும் என்று அக்யூட் ரேட்டிங்ஸ் நிறுவனம் தனது
ஆய்வில் தெரிவித்துள்ளது. அதாவது மதிப்பு அடிப்படையில் ரூ.10,800 கோடிக்கும் மேலான இழப்புகளுக்கு கேரளா உள்ளாகியுள்ளது.

சென்ற 2017-18 நிதியாண்டில் 3.2 சதவிகிதமாக இருந்த கேரளாவின் நிதிப் பற்றாக்குறை, இந்த நிதியாண்டில் 5.4 சதவிகிதமாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தேயிலை, ரப்பர், மிளகு, ஏலக்காய், ஜவுளி, உணவு பதப்படுத்துதல் ஆகிய வேளாண் சார்ந்த மற்றும் தோட்டக்கலைத் துறையில் ரூ.1,200 கோடிக்கு மேலான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: