செங்ஙனூர்:
பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களை செவ்வாய்க் கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், நிவாரண முகாம்களுக்கும் சென்றார்.

ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக கேரளா விற்கு வந்துள்ளார்.செவ்வாய்க்கிழமை காலை வெளிநாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த அவர்,ஹெலிகாப்டர் மூலம் ஆலப்புழா மாவட்டம் செங்ஙனூருக்கு வந்தார். முதலில் நிவாரண முகாமான கிறிஸ்டியன் கல்லூரிக்குச் சென்று அங்கிருந்த மக்களி டம் பேசினார். பின்னர், பொறியியல் கல்லூரி முகாமிற்குச் சென்று பார்வையிட்டார். (பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: