சென்னை,
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த பிரச்சனையில் மருத்துவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து சென்னையில் பயிலரங்கம் நடைபெற்றது.

குழந்தைகளை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அவர்களால் அதை வெளியே சொல்ல முடியாத நிலை இருக்கும்போது அதை கண்டறிவது எப்படி, அப்படி கண்டறியப்பட்டால், அந்த குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதுகுறித்து இந்த பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையும் துளிர் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனமும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தன. விசாரணை, சிகிச்சை, மருத்துவ ரீதியில் உள்ள பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மருத்துவ நிபுணர்களும் உளவியல் நிபுணர்களும் இதில் உரையாற்றினர். இதில் பேசிய பெங்களூரை சேர்ந்தவைதேஹி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷ் நாராயண ரெட்டி தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு குழந்தைகள் பாதிக்கும் நிலைமை உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களை புறக்கணித்தல் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 1லட்சத்து 55 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். துன்புறுத்தல்களை தடுப்பது, ஏற்பட்டு விட்டால் அதனை விரைந்து கண்டுபிடித்து குழந்தைகளை அந்த பாதிப்பில் இருந்துமீட்டு நீண்ட கால பாதிப்பில் இருந்து பாதுகாப்பது அவசியம் என்று கூறினார். அரசு கொள்கைகள், சட்டத்துறை தலையீடு குறித்து மருத்துவர்களுக்கு இந்த பயிலரங்கில் விளக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: