புதுதில்லி;
நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், நாட்டின் 7 முக்கிய நகரங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிமுடிக்கப்படாமல் பாதியில் நிற்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான ‘அனராக்’ தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “2013-ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்பாகவோ தொடங்கப்பட்ட சுமார் 5 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளைக் கட்டும் பணி முடங்கியுள்ளது; இவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சத்து 64 ஆயிரத்து 300 கோடியாகும்” என்று தெரிவித்துள்ளது.மேலும் “கட்டிமுடிக்கப்படாத இந்த வீடுகளில் சுமார் 71 சதவிகிதமான வீடுகள் மும்பை, தில்லி ஆகிய நகரங்களில் மட்டுமே இருக்கின்றன” என்றும், “இவ்விரண்டு பகுதிகளில் உள்ள வீடுகளின் மதிப்பு மட்டும், மொத்த தொகையில் 78 சதவிகிதமாகும்” என்றும் கூறியுள்ளது.
கட்டுமான நிறுவனங்களின் நிதி நெருக்கடி, நிலங்கள் மீதுள்ள பிரச்சனை போன்றவையே வீடு கட்டும் பணிகள் முடங்கி இருப்பதற்கு காரணம் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.