ஜெகர்தா,
இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இந்தோனேசியாவின் டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், வணிக வளாகங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இன்றைய நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்போக் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 555 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: