ஜகர்தா : இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்கம் பதக்கத்தை வென்றார். இவருக்கு அடுத்த நிலையில் ஓடிய இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதே போல் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் 9 ஆம் நாளான நேற்று தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றார். மேலும், அவர் 48.96 வினாடிகளில் இலக்கை கடந்தது இதுவரை தேசிய அளவிலான இருந்த சாதனையை முறியடித்துள்ளார். தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரர் தருணுக்கு தமிழக அரசின் சார்பில் 30லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. ஸ்குவாஷ் விளையாட்டில் தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர். ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சௌரவ் கோஷல் காலிறுதியில் தோல்வியுற்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மேற்கண்ட தமிழக வீரர்கள் மூவருக்கும் தலா 20லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

போட்டியின் 10 ஆம் நாளான இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  உலகின் நம்பர்.1 வீராங்கனையான  டாய் டிசு யிங்-ஐ எதிர்கொண்டார். இறுதிப்போட்டியில் 13-21, 16-21 என்ற நேர்செட் கணக்கில் டாய் டிசு யிங்கிடம் சிந்து தோல்வியை சந்தித்தார். இதன் காரணமாக பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்கம் பதக்கத்தை வென்றார். இவருக்கு அடுத்த நிலையில் ஓடிய இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

Leave A Reply

%d bloggers like this: