திருவள்ளூர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கும்மிடிப்பூண்டி வட்ட 3 ஆவது மாநாடு கும்மிடிப்பூண்டியில் பகுதிக்குழு உறுப்பினர் பி.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.எழிலரசன், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வேலை அறிக்கையை வாசித்தார். சங்கத்தின மாநிலபொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். கே.முனிரத்தினம் நன்றி கூறினார். செதில்பாக்கம் கிராமத்தில் உள்ள 32 ஏக்கர் பஞ்சமி நிலத்தை 197தலித் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், மேலக்கழனி, சென்னாவரம், சுண்ணாம்புகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும், கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும், நூறு நாள் வேலை தொடர வேண்டும், முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்:
வட்டத் தலைவராக வி.ஜோசப், செயலாளராக எம்.சிவக்குமார், பொருளாளராக சி.பிரேம்நாத் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.