திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செங் கத்தை அடுத்த அரியாகுஞ்சூர்- சின்ன கல்தாம்பாடி- அரட்டவாடி கிராமச் சாலை 250 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து கிடைக்கிறது. 2500 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள்  இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மாணவர்கள், முதியோர், வியாபாரிகள் என, பலரும் வெளியூர்களுக்குச் சென்றுவர, சாலைவசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். ஊரில் நான்கு புறமும் காடுகள் உள்ளதால், கிராமம் தீவாகக் காணப்படுகின்றது. மருத்துவமனை, கூட்டுறவு வங்கி, பள்ளிக் கூடம் சென்று வர, காட்டின் இடையே உள்ள, ஒற்றையடி சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதனால், கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கிராம சாலையை செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தியும், கோரிக்கை மனுக்களை அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, திங்களன்று (ஆக. 27) ஆட்சியர் அலுவலகம் முன்பு திறண்ட கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம், கிராம சாலை அமைக்கக் கோரி மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: